மாநகராட்சியாகிறது நாகர்கோவில்...... எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி இதனை அறிவித்தார். ஏற்கனவே 12 மாநகராட்சி இருக்கும் நிலையில் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் 150 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்கி புயலில் இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டபோது, கன்னியாகுமரிக்கு மின் வசதிகள் உடனடியாக வழங்கப்பட்டது.

எல்லைகள் மறுசீரமைப்பு பணி முடிந்தவுடன் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். ரூ.120 கோடி செலவில் விவேகானந்தர் பாறைக்கு பாலம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். விவேகானந்தர் பாறைக்கு செல்ல புதிதாக 2 படகுகள் வாங்கப்படும். இனயம் துறைமுகத்தில் தூண்டில்பாலம் அமைக்கப்படும். புதிய வருவாய் வட்டமாக கிள்ளியூர் உருவாக்கப்படும். நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற முதல்வரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: