×

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வு கடந்த 14–ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி கையிருப்பு 8,600 கோடி ரூபாய் அதிகரித்து, சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு கண்டிருப்பதாகவும் ரிசர்வு வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல் தங்கத்தின் கையிருப்பும், சுமார் 1000 கோடி அதிகரித்து 1.46 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Foreign exchange reserves, Reserve Bank
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்