×

குமரியில் புதிதாகக் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிதாகக் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், தொடர்ந்து 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோட்டை வடிவில் மேடை அமைக்கப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பேனர்கள், கொடி தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் என நாகர்கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக 2,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumari, foundation, MGR. Century Festival, Nagercoil, Chief Minister Palani
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...