அரசு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் உச்சபட்ச வயது வரம்பை குறைக்க வேண்டும்: கல்லூரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை: துணை வேந்தரின் உச்சபட்ச வயது வரம்பு 70. இது முறைகேடு நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக கல்லூரி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, கல்லூரி ஆசிரியர்கள் கூறியதாவது: துணை வேந்தர்களின் பணி அனுபவத்ைத பயன்படுத்திக் கொள்வதற்காகவே உச்சபட்ச  வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. பணி நியமனத்துக்காக லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த கணபதி கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த போலீசார் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த முறைகேட்டிலும் அப்போதைய துணை வேந்தருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

ஏழாவது ஊதிய கமிஷன் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58.  குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர்கள்தான், துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதி உள்ளது. ஓய்வுபெறும் வயதை தாண்டியபின் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக உள்ளாரா என்று தெரியாத ஒருவரை எதற்காக துணை வேந்தராக நியமிக்க வேண்டும்.  வெறுமனே கையெழுத்து போடும் நபராக வைத்து விட்டு, அதிகாரம் படைத்தவர்கள் முறைகேடாக நிதியை அபகரிக்கிறார்கள். வேறு சில துணை வேந்தர்களோ, பதவியில் இருக்கும் 3 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு பதிலாக, வெறுமனே உத்தரவு கடிதங்களுக்கு கையெழுத்து போடும் நபராக உள்ளனர். அதனால் துணை வேந்தர் பதவிக்கான கல்வித்தகுதியை மாற்ற வேண்டும். மேலும், துணை வேந்தரின் உச்சபட்ச வயது வரம்பை குறைக்க வேண்டும். இவ்வாறு கல்லூரி ஆசிரியர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: