உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க அனுமதி: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் தகவல்

சென்னை: உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க அந்நாட்டு மன்னர் அனுமதி அளித்துள்ளதாக அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர் வெளியிட்ட அறிக்கை: உம்ரா செய்வதற்கு சவுதி அரேபியா செல்பவர்கள் மக்காவுக்கும் மதினாவுக்கும் மட்டும்தான் செல்ல முடியும். வேறு எந்த நகரத்துக்கு உள்ளும் செல்ல முடியாது. மக்காவுக்கு அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமான தாயிப் நகரத்துக்குள் அரசுக்கு தெரியாமல்தான் செல்ல முடியும். அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டால் எல்லையிலேயே திருப்பி அனுப்பி விடுவார்கள். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள்.

இந்நிலையில், உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க அந்நாட்டு மன்னர் அனுமதி அளித்துள்ளார். மன்னரின் இந்த புதிய அறிவிப்பால் இனி உம்ரா விசாவில் மக்கா செல்பவர்கள் தாயிப் நகரத்துக்குள் மட்டுமல்லாமல் சவுதி அரேபியா முழுவதிலும் தங்கு தடையின்றி போய் வரலாம். இதற்காக அந்நாட்டு மன்னருக்கு அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பிலும் ஏனைய அனைத்துலக இஸ்லாமிய சமூகத்தார்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: