1957ம் ஆண்டே காலாவதியாகி விட்டது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 செல்லாது: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 காலாவதியாகி விட்டதாகவும், அது செல்லாது எனவும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்த 1949ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் 21ல் திருத்தம் செய்து கொண்டு வரப்பட்டது. இதன்படி, வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது. காஷ்மீர் பெண்கள் வேறு மாநில ஆண்களை மணந்து கொண்டால் சொத்தில் உரிமை கோர முடியாது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவை எதிர்த்து, டெல்லியைச் சேர்ந்த பாஜ வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘‘சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகள், 1957, ஜனவரி 26ம் தேதி அப்போதைய காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட போதே காலாவதியாகி விட்டன. தற்போது இச்சட்டப்பிரிவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதால் இது செல்லுபடியாகாது.எனவே, சட்டப்பிரிவு 370 தன்னிச்சையானது, அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார் இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: