பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4.5 லட்சம் குற்றவாளிகளின் விவரம் அறிய இணையதளம்: மத்திய அரசு தொடங்கியது

புதுடெல்லி: நாடு முழுவதும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4.5 லட்சம் குற்றவாளிகளின் விவரங்கள் அடங்கிய தேசிய ஆவண இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் தொகுக்கப்பட்டு, தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம், நாட்டின் எந்த பகுதிகளில் குற்றம்  நடந்தாலும் இந்த காப்பகத்தில்  உள்ள குற்றவாளிகள் பற்றிய ஆவணங்களை பெற்று ஆய்வு செய்ய முடியும். இதேபோல், தற்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்களின் விவரங்களும் தொகுக்கப்பட்டு, புதிய ஆவண இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில், இந்த குற்றங்களுக்காக தண்டனை பெற்ற 4.5 லட்சம் பேரின் தகவல்கள், 3.5 லட்சம் குற்றவாளிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஈவ் டீசிங் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் பெயர் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆவணங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் மத்திய உள்துறை அமைச்சகம் இணைந்து தயாரித்துள்ளது. இதுபோன்ற ஆவணத்தை பாதுகாக்கும் 9வது உலக நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இந்த தேசிய ஆவண இணையதளத்தை  டெல்லியில் நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: