உள்ளாட்சி தேர்தல் வருமா? கமல்ஹாசன் சந்தேகம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவையில் இருந்து நேற்று மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:நடிகர் கருணாஸ் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. ஆனால், தற்போது ஜாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த வேளையில் விளையாட்டுக்கு கூட, ஜாதியின் பெயரை பேசக்கூடாது. அவர் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அப்படியிருந்தால் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும்.

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என கூறுவதற்கு, அதற்கான ஆயத்தங்களை நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. அவசரப்பட்டு திட்டமிடாமல் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. அந்த தேர்தல் வருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கமல்ஹாசன் தேர்தலை வேடிக்கைதான் பார்க்க முடியும். தேர்தலில் போட்டியிட முடியாது என கூறியுள்ளார். நான் அவருக்கு சொல்லிக்கொள்வது, நீங்கள் தேர்தல் நடத்துவதுபோல், தேர்தல் நடத்தினால், அதை வேடிக்கைத்தான் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், அதை வேடிக்கையாகவும் பார்க்கலாம். சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் புரட்சித்தலைவி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்களுக்காகவே அந்த படம் தயாரிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஆட்சியாளர்கள், ஊழலை மிகவும் சாதுர்யமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். இதைபோன்ற ஊழல்களை, ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: