பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 10 காவலர் குடும்பங்களுக்கு நிதி : முதல்வர் அறிவிப்பு

சென்னை: பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 10 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:வேலூர் மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிந்த சசிகுமார், வேலூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்த கோபி, திருச்சி நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து பிரிவு ராம்ஜிநகர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ராஜகோபால் ஆகியோர் சாலை விபத்திலும், தேனி, ராஜதானி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆவடி காவல் நிலைய குற்றப் பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்த லூக்காஸ், கன்னியாகுமரி, வடசேரி காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்த விஜயகுமார், கன்னியாகுமரி சுசீந்திரம் காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்த சொரிமுத்து, சென்னை திருவொற்றியூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்த மனோகரன், கிருஷ்ணகிரி கல்லாவி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த கார்த்திக் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும்,ராமநாதபுரம், தொண்டி காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்த ஆர்.முருகேசன் தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.உடல் நலக்குறைவு, சாலை விபத்து மற்றும் தீ விபத்தில் உயிரிழந்த 10 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 10 காவலர்களின்குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: