×

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்றவர்கள் சஸ்பெண்ட்

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்த ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கையை அனைத்து மண்டல பொதுமேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து பொது மேலாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த மாதம் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலும், கடந்த 6ம் தேதி திருவள்ளூர் மேற்கு, சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்கொள்ளப்பட்ட தலைமை அலுவலக பறக்கும் படை ஆய்வில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்த பணியாளர்களில் ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த முறைகேட்டிற்காக தற்காலிக பணிவிடுப்பில் உள்ள பணியாளர்களிடம் டாஸ்மாக் மோசடி நடவடிக்கைகள் மற்றும் கண்டுபிடித்தல் விதிகள்படி அபராத தொகை மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்ட பிறகு மீண்டும் பணி வழங்க வேண்டும். இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் பட்சத்தில் ஏற்கனவே பணிவிடுவிப்பு செய்யப்பட்ட கடைகளில் பணியமர்த்தாமல் விற்பனை குறைவான கடைகளில் மூப்பு அடிப்படையில் பணியமர்த்த உரிய முன்மொழிவுகளை சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி அவரின் அனுமதி பெற்று மீளப்பணியிடம் வழங்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TASMAC, suspen, Additional price, alcohol
× RELATED தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா...