×

பங்குச்சந்தை ஊசலாட்டம் முதலீட்டாளர்கள் கலக்கம்

மும்பை: பங்குச்சந்தை 1,500 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் கலக்கம் அடைந்தனர். மாலையில் சற்று மீண்டதால் சற்று நிம்மதி அடைந்தனர். வாரத்தின் கடைசி நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் நேற்று திடீரென ஆட்டம் கண்டன. வர்த்தகம் துவங்கியம் சற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் பிற்பகலில் கடும் பாதிப்பை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது. பின்னர். 1,100 புள்ளிகள் சரிந்தது. 35,993.64 ஆனது. வர்த்தக இடையில் 1,495.60 புள்ளிகள் ஊசலாட்டம் கண்டது. சிறிய பங்குகள் 3.7 சதவீதமும், நடுத்தர பங்குகள் 2.5 சதவீதமும் மதிப்பு சரிந்தன.  

எஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி பதவிக்காலத்தை நீட்டிக்க ரிசர்வ் வங்கி மறுத்ததை தொடர்ந்து அதன் பங்குகள் 28.71 சதவீதம் குறைந்தன. மருந்து நிறுவனங்கள், பொதுத்துறை வங்கி பங்குகளும் சற்று சரிவு கண்டன. வங்கி சாரா நிதி நிறுவனங்களான திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பொரேஷன் உள்ளிட்டவற்றின் பங்குகளும் 55 சதவீதம் வரை சரிந்தன.

திடீரென அதலபாதாளத்தில் பங்குச்சந்தை வீழ்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் கலக்கம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வர்த்தக முடிவில் பங்குச்சந்தைகள் சற்று மீண்டதால் நிம்மதி அடைந்தனர். மும்பை பங்குச்சந்தை 279.62 புள்ளிகள் சரிந்து 36,841.60 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 91.25 புள்ளிகள் சரிந்து 11,143.10ஆகவும் இருந்தன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stock market, swings, investors
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...