பிரதமரை கொல்ல நினைக்கும் நகர்ப்புற நக்சல்களுக்கு ஆதரவு அளிப்பது ஏன்? - ராகுலுக்கு அமித்ஷா கேள்வி

ராய்ப்பூர்: ‘‘பிரதமர் மோடியை கொல்ல நினைக்கும் நகர்ப்புற நக்சல்களுக்கு ராகுல் ஆதரவு அளிப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும்’’ எ்ன்று பாஜ தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.  சட்டீஸ்கரில் நேற்று பாஜ தலைவர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ேபசியதாவது: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என  ராகுல் பாபா பகல் கனவு காண்கிறார். ராகுல் காந்தியும், அவரது ஆதரவாளர்களும் பிரதமரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டும் நகர்ப்புற நக்சல்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.  பிரதமரை கொல்வதற்கு சதி செய்பவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் நகர்ப்புற நக்சல்கள் பிரச்னையில் தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு ராகுல் பாபா தெளிவுப்படுத்த வேண்டும். 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு, ஒவ்வொரு மாநில தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்து வருகின்றது.நீங்கள் எங்களை பார்த்து நான்கரை ஆண்டுகளில் என்ன செய்து வீட்டீர்கள் என்று கேள்வி கேட்கிறீர்கள்? உங்கள் ஆட்சியின்போது புறக்கணிக்கப்பட்ட  ஏழை மக்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்காக இந்த அரசு பணியாற்றி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைதி காத்து வந்தார். ஆனால், யூரி தாக்குதலுக்கு பின்னர், மோடி தலைமையின் கீழ் பாதுகாப்பு படையினர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: