ஏற்காடு மலைப்பாதையில் மிளகு கொடியில் காய்ப்பு அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: ஏற்காட்டில் பயிரிடப்பட்டுள்ள மிளகு கொடியில் காய்ப்பு நல்லமுறையில் பிடித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகளவில் இந்தோனேஷியா, இலங்கை, வியட்நாம், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவில் கேரளா, கர்நாடகாவிலும், தமிழகத்தில் ஏற்காடு, கொல்லிமலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதிகமாக மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் ஊடுபயிராக மிளகு பயிரிடப்படுகிறது.  கடந்தாண்டு ஓரளவுக்கு மழை கை கொடுத்துள்ளதால் ஏற்காடு, கொல்லிமலையில் மிளகு கொடியில் பூ பூத்து காய்ப்பு தொடங்கியுள்ளது. நடப்பாண்டு அனைத்து பகுதியிலும் மிளகு கொடியில் காய்ப்பு நல்லமுறையில் பிடித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இது குறித்து ஏற்காடு மிளகு விவசாயிகள் கூறியதாவது:  ஏற்காட்டில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சில்வர் ஓக் மரத்தில் ஊடுபயிராக மிளகு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் கொடியில் பூ பூத்தது. கடந்த ஒரு மாதமாக அனைத்து கொடியிலும் காய்ப்பு பிடித்துள்ளது. இந்த காய் நன்கு பழுத்து நவம்பர் மாதம் இறுதியில் முதிர்ச்சியடையும். டிசம்பர் மாதத்தில் மிளகு அறுவடை செய்து, காயவைத்து விற்பனைக்கு அனுப்புவோம். இங்கு அறுவடை செய்யப்படும் மிளகு சென்னை, பெங்களூர், கோவை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஆயிரம் முதல் 2ஆயிரம் கிலோ மிளகு கிடைக்கும். கிலோ சராசரியாக 500க்கு விற்றாலே,  50 ஆயிரம் முதல்  60 ஆயிரம் வருவாய் ஈட்டமுடியும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: