முதுகெலும்பு உடைந்த பாம்புக்கு உயிர் தந்த பாசக்காரன்

மும்பை: மும்பை புறநகர் பகுதியான தகிசரில் விரியன் பாம்பு கம்பால் தாக்கப்பட்டு காயமடைந்து கிடந்ததை அப்பகுதியை சேர்ந்த ஹவல்தார் ஒருவர் பார்த்து அதை அனில் குபால் என்ற பாம்பு பிடிக்கும் நபரிடம் ஒப்படைத்தார். விரியன் பாம்பு கொடிய விஷமுடையது. அனில் அந்த பாம்பை உடனடியாக செம்பூரில் உள்ள கால்நடை மருத்துவர் தீபா கத்யாலிடம் கொண்டு சென்றார். டாக்டர் அந்த பாம்பை பரிசோதித்து பார்த்தபோது அதன் முதுகெலும்பு உடைந்திருந்தது தெரிந்தது. அடுத்த கட்ட நடவடிக்கையாக பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிவதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த டாக்டர் தீபா முடிவு செய்தார்.அந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. ரேடியோலாஜிஸ்ட் டாக்டர் ரவி தபார் அதை செய்தார்.  தான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்ப்பதாக டாக்டர் தபார் கூறினார்.பாம்புக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தாமல் வாய்வழியாக மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது தற்போது உடல்நிலை நன்கு தேறி வருவதாக டாக்டர் தபார் தெரிவித்தார். முழுமையாக குணம் அடைந்ததும் காட்டுப் பகுதியில் கொண்டுபோய் விடப்படும் என்று அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: