நெல்லையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகார்: அதிமுக ஆட்சியில் ஊழல் என எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம்

நெல்லை: நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வழியாக சென்றார். மாநகர எல்கையான கேடிசிநகர் நான்கு வழிச்சாலை பாலம் அருகே அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எம்பி எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் வரிசையாக நின்று சால்வை அணிவித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவை அழிக்க வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். அவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். கடந்த எம்பி தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றி தேடித் தந்தீர்கள். அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றி தேடித்தர வேண்டும்.

அப்போது தான் மத்திய அரசிடம் இருந்து நமக்குத் தேவையான திட்டங்களை பெற முடியும். எதிர்கட்சிகள் எல்ேலாரும் சேர்ந்து நம்மை எதிர்க்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்து விடும், கட்சி அழிந்து விடும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. மாறாக அதிமுக வலுப்பெற்றிருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். அவர்களின் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. மக்கள் ஆதரவோடு தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். சண்முகநாதன் புறக்கணிப்பு: கட்சியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை என்று முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் நேற்று அவரை வரவேற்பதை வைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன் தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: