கரூர் கல்குவாரி அதிபர்கள் வீடுகளில் இரண்டாவது நாளாக ஐ.டி. ரெய்டு

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயலபடுகின்றன. இந்த கல் குவாரிகளில் வரிஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக  வருவமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று முன்தினம் கரூர் க,பரமத்தி அருகே உள்ள கல்வகுவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காருடையாம்பாளையம் கற்பக விநாயகா, பொன்விநாயகா, காட்டுமுன்னூர் பாலவிநாயகா, திருமுருகன், வல்லிபுரம் விநாயகா ஆகிய குவாரிகளில் திருச்சியில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர், நேற்று 2வது நாளாக சோதனை தொடர்ந்தது. கல்கு வாரிகளிலும் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தாமல், பலகோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்படடது. அதுதொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர், நேற்றுபிற்பகல் 3 குவாரிகளில் ஆய்வு முடிக்கப்பட்டது. மீதம் உள்ள 2 குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்,  கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருச்சி வருமானவரித்துறை ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.  முக்கொம்புக்கு எத்தனை டன் கற்கள் அனுப்பப்பட்டது?. அரசுதுறைக்கு கற்களை கொடுத்துவிட்டு தாங்கள் விற்பனை செய்த லோடுகளுக்கு கணக்குகாட்டாமல் வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே குவாரி அதிபர்கள் 5 பேரை விசாரணைக்காக திருச்சியில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: