×

உற்பத்தி செய்யாத மின்சாரத்திற்கு 9.17 கோடி வசூல் தூத்துக்குடி நிறுவனம் 11.7 கோடியை செலுத்த வழக்கு தொடர்ந்துள்ளோம்: அமைச்சர் தங்கமணி விளக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலிருந்து வழங்கப்பட்ட மின்சாரத்தை தனது உற்பத்தி என்று கூறி  9.17 கோடி வசூலித்த தனியார் நிறுவனம் வட்டியுடன்  11.7 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் ஐகோர்ட்டில் தடையாணை பெற்றுள்ளனர். இதுதொடர்பாக 3 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கமணி பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடில்லை. அடுத்த 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. மின்உற்பத்தி பாதிக்கப்படவில்லை. தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது.

காற்றாலை மின்சாரம் கொள்முதலில் ஊழல் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். நவம்பர், டிசம்பரில் காற்றாலை உற்பத்தி நடக்காது. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தனது உற்பத்தியை ஈரோட்டில் உள்ள இரு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். மின்சாரத்தை உற்பத்தி செய்யாமலேயே இந்நிறுவனம் அந்த மின்சாரத்திற்கான தொகையை வாங்கியுள்ளனர்.  ஆனால் அந்த மின்சாரம் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் இருந்து சென்றது, அதற்கான பணம் மின்வாரியத்திற்கு வரவேண்டியது. அதனை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்து 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்து,  போலீசில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 9.17 கோடி மற்றும் 22% வட்டியுடன் 11.78 கோடி தரவேண்டுமென்று நோட்டிஸ் அனுப்பியுள்ளோம். நாங்கள் அனுப்பிய ேநாட்டீசிற்கு அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்று வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi Minister Thamamani
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...