பண்ருட்டி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பெண் பலி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்  ஆரோக்கியதாஸ்(45). இவரது மனைவி ஆரோக்கியசெல்வி. இருவரும் அரசு வழங்கிய  தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மதிய உணவுக்காக வீட்டின் முன்  சமையல் கொட்டகையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தொகுப்பு வீட்டின்  பின்பக்க சுவர் இடிந்து ஆரோக்கியசெல்வி மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி  வந்து மீட்டனர். தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை  செய்வதற்காக சேர்த்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: