×

ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்றம் அரிச்சல்முனை செல்ல பயணிகளுக்கு தடைவிதிப்பு

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அரிச்சல்முனை கடல் பகுதியில், கடல் நீர் அதிகளவில் கரையேறியுள்ளது. அரிச்சல்முனை சென்றால் சுற்றுலாப்பயணிகள் கடலில் இறங்குவார்கள் என்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாவட்ட நிர்வாகம் அங்கு செல்ல நேற்று தடை விதித்தது.  இதனால் நேற்று ராமேஸ்வரம் வந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள், தங்களது வாகனங்களில் தனுஷ்கோடி சென்றபோது பணியில் இருந்த போலீசார், தனுஷ்கோடியிலுள்ள சேதமடைந்த சர்ச் பகுதி வரை செல்ல அனுமதித்தனர்.

அதற்குமேல் அரிச்சல்முனை பகுதிக்கு செல்ல எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை என்பதால் நகர் பேருந்து, ஆட்டோக்களில் செல்லும் சுற்றுலாபயணிகள் தனுஷ்கோடியுடன் நிறுத்தப்பட்டனர். தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் கோதண்டராமர் கோயில், புயலால் சேதமடைந்த சர்ச், பழைய கட்டிடங்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்புகின்றனர். அரிச்சல்முனை கடற்கரை பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த உத்தரவு வரும் வரை இந்நிலை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram, sea fury, sarcina
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...