மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து 8,078 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9096 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி ஆயிரம் கனஅடி சரிந்து 8078 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நீர்மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாயில் 800 கனஅடி என மொத்தம் 22,800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 15ம் தேதி 114.08 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று முன்தினம் 109.73 அடியானது. நேற்று 108.81 அடியாக சரிந்தது. அதன்படி, ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 6.17 அடி வரையிலும் குறைந்துள்ளது. நீர் இருப்பு 76.73 டிஎம்சி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: