சாலை, தேசிய ஊரக வேலையில் ஊழல் ஊரக வளர்ச்சித்துறை இன்ஜினியர் 3 பேர் சஸ்பெண்ட்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இளங்காடு கிராமத்தில் 1.9 கி.மீ தூரத்துக்கு தார் சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ₹15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனிடையே 1.2 கி.மீ தூரம் வரை மட்டுமே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 700 மீட்டர் தூர சாலையை போடாமல் விட்டுள்ளனர். ஆனால் ஒன்றிய பொறியாளர் அறிவொளி, இந்த சாலை முழுமையாக போடப்பட்டதாகக்கூறி, கமிஷன் பெற்றுக்கொண்டு பில் தயார் செய்து பணத்தை ரிலீஸ் செய்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்த திட்ட இயக்குநர் மகேந்திரனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விசாரணையில் கோலியனூர் இன்ஜினியர் அறிவொளி சாலைப்பணிகளை முழுமையாக போடாமல் பணத்தை முறைகேடு செய்ததை உறுதிசெய்து அறிக்கை அளித்தார். அதனைத்தொடர்ந்து கோலியனூர் இன்ஜினியர் அறிவொளியை  பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். இதே போல் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் இன்ஜினியர் பாஸ்கர், பணி மேற்பார்வையாளர் பிருந்தா ஆகியோர் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பணிகளை முடித்துவிட்டு பயனாளிகளின் பணத்தை முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதே போல் வல்லம் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் இன்ஜினியர் ஒருவர் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்ததாகவும் கலெக்டரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: