‘லிவிங் டூ கெதர்’ பாணியில் ஓராண்டு வாழ்ந்து கொலை மிரட்டல் - கள்ளக்காதலியின் கருவை கலைத்த வாலிபர் கைது

சென்னை,: ‘லிவிங் டூ கெதர்’ பாணியில் ஓராண்டு வாழ்ந்து கள்ளக்காதாலியை கர்ப்பமாக்கி கரு கலைத்து., அவருக்கும் அவரது தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு மகன் சவுந்தர் (24). திருமணமானவர். பொன்னேரி அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் சின்ன துரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த ஆண்டு சின்னத்துரை தனது நண்பர் சவுந்தருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த திருமணத்துக்கு பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் மோகனபிரியா (23) என்பவரும் வந்தார். கணவரை பிரிந்து வாழும் மோகனபிரியாவுடன் நட்பு முறையில் சவுந்தர், சின்னதுரை ஆகிய இருவரும் பேசினர். இது கள்ளக்காதலாக உருவெடுத்தது. பின்னர், 3 பேரும் பல இடங்களுக்கு சென்றனர். அப்போது, தனது 10 சவரன் நகையை விற்று மோகனபிரிய செலவு செய்ததாக கூறப்படுகிறது.

நாட்கள் செல்ல செல்ல மோகனபிரியாவுக்கும், சவுந்தருக்கும் நெருக்கம் அதிகமானது. இதையடுத்து, திருமணம் செய்வதாக மோகனபிரியாவுக்கு சவுந்தர் வாக்குறுதி அளித்து, தாலி கட்டாமல் இருவரும் குடும்பம் நடத்தி உள்ளனர். இதற்கு சின்னதுரை உறுதுணையாக இருந்துள்ளார். இந்த விவகாரம் சவுந்தரின் மனைவிக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு மோகனப்பிரியா கர்ப்பமானார். உடனே மோகனப்பிரியா, தான் கர்ப்பமானதை சவுந்தரிடம் கூறி, தாலி கட்டி அதிகாரப்பூர்வமாக மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பிறக்கும் குழந்தைக்கு தந்தை என்ற அந்தஸ்தையும் வழங்க வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளார். சவுந்தர், மருத்துவபரிசோதனை செய்வதாக அங்குள்ள தனியார் கிளினிக்கு மோகனபிரியாவை அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து கரு கலைப்பதற்கான மருத்து மாத்திரைகளை வங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார். அதுமட்டுமின்றி கள்ளக்காதல் விவகாரங்களை குடும்பத்தாரிடம் கூறி பிரச்னை ஏற்படுத்தினால் கொலை செய்து விடுவதாகவும் மோகனபிரியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மோகனபிரியா, தந்தை ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார்.  அவர் இருவரையும் சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இனியும் பேசக்கூடாது. அப்படி பேச வந்தால் உன்னை தொலைத்து கட்டிவிடுவோம்’’ என்று கூறி அவரையும் மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ராமச்சந்தின், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர், சின்னதுரை ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின்னர் இருவரையும்  பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தனியார் கிளினிக் மீது நடவடிக்கை பாயுமா?

சமீப காலமாக கரு கலைப்பு சர்வ சாதாரணமாக நடக்கிறது. இருவருக்கும் இடையே உள்ள தவறான உறவால் உருவாகும் அப்பாவி பிஞ்சு குழந்தையை இரக்கமின்றி மாத்திரை கொடுத்து கலைக்கப்படுகிறது. இது, பெரும்பாலும் தனியார் கிளினிக்கில் தான் நடக்கிறது. சமீபத்தில், திருவண்ணாமலை செஞ்சி அருகே பெண்ணுக்கு கருவை கலைத்த தனியார் கிளினிக் நர்சால் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதற்கு தவறான சிகிச்சையே காரணம் என தெரியவந்தது. இதை பார்க்கும் போது, சட்ட விரோதமாக நடக்கும் கரு கலைப்பு செய்யும் தனியார் கிளினிக்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. எனவே, தவறான முறையில் கரு கலைக்கும் தனியார் கிளினிக் மற்றும் செவிலியர்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: