பான் பசிபிக் ஓபன் அரை இறுதியில் பிளிஸ்கோவா

டோக்கியோ,: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.கால் இறுதியில் அமெரிக்க வீராங்கனை அலிசான் ரிஸ்கியுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா, முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த அலிசான் ரிஸ்கி 7-6 (7-5) என டை பிரேக்கரில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேற, இந்த செட்டும் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. 2 மணி, 34 நிமிடத்துக்கு நீடித்த இந்த போட்டியில் பிளிஸ்கோவா 6-1, 6-7 (5-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு கால் இறுதியில் உள்ளூர் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பார்போரா ஸ்டிரைகோவாவை (செக்.) வீழ்த்தினார். இத்தாலியின் கமிலா ஜார்ஜியுடன் கால் இறுதியில் மோதிய பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா முதல் செட்டில் 3-5 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். மற்றொரு கால் இறுதியில் 2வது ரேங்க் வீராங்கனை கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-6, 4-6 என்ற நேர் செட்களில் டோனா வேகிச்சிடம் (குரோஷியா) அதிர்ச்சி தோல்வியடைந்தார். அரை இறுதியில் கமிலா ஜார்ஜியுடன் கரோலினா பிளிஸ்கோவாவும், நவோமி ஒசாகாவுடன் டோனா வேகிச்சும் மோதுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: