ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று லீக் : பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் போராடி வெற்றி

அபுதாபி: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில்,    கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி  3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கன் அணியை போராடி வென்றது.  ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக முகமது ஷஷாத், இசானுல்லா களமிறங்கினர். இசானுல்லா 10 ரன் எடுத்து முகமது நவாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமதுவிடம் பிடிபட்டார். ஷஷாத் 20 ரன், ரகமத் ஷா 36 ரன் எடுத்து நவாஸ் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட, ஆப்கானிஸ்தான் 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், ஹஷ்மதுல்லா - கேப்டன் அஸ்கர் ஆப்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 94 ரன் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது.

அபாரமாக விளையாடிய ஹஷ்மதுல்லா ஷாகிதி 97 ரன் (118 பந்து, 7 பவுண்டரி), குல்பாதின் 10 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ரன் கணக்கை துவங்கும் முன்பே பாகர் ஜானம் விக்கெட்டை பறிகொடுத்தார்.  இமாம் வுல் ஹக் 80 ரன்(104) எடுத்த நிலையில் ரன்அவுட்டானார்.  பாபர் ஆசம் 66 ரன்(94), எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆனார். பின்னர் வந்தவர்கள் வரிசையாக நடையை கட்ட மறுமுனையில் சோயிப் மாலிக் 51*(43) நிலைத்து நின்று ஆடினார். இதனால்  ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது.  பரபரப்பு அதிகரித்த கடைசி ஓவரில் அடுத்தடுத்த பந்தில் சிக்சரும், பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் மாலிக்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: