ஆசிய கோப்பை சூப்பர் 4 முதல் போட்டி : வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

துபாய்: வங்கதேச அணியுடனான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜடேஜா இடம் பெற்றார்.  லிட்டன் தாஸ், ஷான்டோ இருவரும் வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். தாஸ் 7 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் கேதார் வசம் பிடிபட்டார். ஷான்டோ 7 ரன் எடுத்து பூம்ரா பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து  ஆட்டமிழந்தார்.ஷாகிப் அல் ஹசன் 17, முகமது மிதுன் 9, முஷ்பிகுர் ரகிம் 21 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் அணிவகுக்க, வங்கதேசம் 18 ஓவரில் 65 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.  ஓரளவு தாக்குப்பிடித்த மகமதுல்லா 25 ரன், மொசாடெக் உசேன் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் உறுதியுடன் போராடிய கேப்டன் மஷ்ராபி மோர்ட்டசா 26 ரன் (32 பந்து, 2 சிக்சர்), மெகதி ஹசன் மிராஸ்

42 ரன் (50 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர்.முஸ்டாபிசுர் ரகுமான் 3 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, வங்கதேச அணி 49.1 ஓவரில் 173 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ருபெல் உசேன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்திய பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா 10 ஓவரில் 29 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடா்ந்து ஆடிய இந்திய அணி 36.2 ஓவா்களில்3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இந்தி அணி கேப்டன் ரோகித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 104 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் எடுத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: