காங்கிரசை கழற்றி விட்டு சட்டீஸ்கரில் அஜித் ஜோகியுடன் கைகோர்த்தார் மாயாவதி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார்.

சட்டீஸ்கரில் பாஜ ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. நாடு முழுவதும் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் நிலையில், இம்மாநிலத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு, அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன் கூட்டணி சேரப்போவதாக அறிவித்துள்ளார். அஜித் ேஜாகி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாயாவதி, தங்கள் கூட்டணி வெற்றிப்பெற்றால் அஜித் ஜோகிதான் முதல்வர் என்றும் தெரிவித்தார். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் 35 தொகுதிகளிலும், ஜனதா காங்கிரஸ் 55 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: