மலேசிய மாஜி பிரதமர் நஜீப் மீது 21 புதிய வழக்குகள்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், வங்கி கணக்கில் முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக புதிதாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மலேசியாவில் கடந்த 1957ம் ஆண்டு முதல் பார்சியன் தேசிய கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. பிரதமராக நஜீப் ரசாக் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வியடைந்தார். எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த மகாதிர் பிரதமராக பொறுப்பேற்றார். நஜீர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதே அவர் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.  இந்நிலையில் மகாதிர் பொறுப்பேற்ற பின்னர் நஜீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

1எம்டிபி எனப்படும் மலேசிய அரசின் அபிவிருத்தி வாரியத்தின் நிதி சுமார் ரூ.4500 கோடியை தனது சொந்த கணக்கிற்கு நஜீப் மாற்றிக்கொண்டது குறித்த விசாரணையை புதிய அரசு தீவிரப்படுத்தியது. அதிகார துஷ்பிரயோகம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் என நஜீப் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நஜீப் கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது  புதிதாக 21 பணமோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: