ஆசிய கோப்பை கிரிக்கெட் - பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

அபுதாபி: வலிமை வாய்ந்த வங்கதேசத்தை ஆப்கன் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அபுதாபியில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால், ஹஸ்மதுல்லா ஷகிதி (58 ரன்), முகமது ஷெசாத் (37) தவிர மற்றவர்கள் நிலைக்க தவறினர். 40.5 ஓவரில் 160 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில், குல்பதின், ரஷித்கான் ஜோடி அசத்தியது. அதிரடியாக ஆடிய ரஷித்கான், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசி ஒருநாள் போட்டியில் தனது 3வது அரைசதத்தை அடித்தார். இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 95 ரன் விளாசியது. ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்தது. ரஷித்கான் 57 ரன் (32 பந்து), குல்பதின் 42 ரன்னுடன் (38 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்ததாக 256 ரன் என்ற சவாலான இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. தங்களது துடிப்பான பீல்டிங் மற்றும் துல்லியமான பவுலிங் மூலம் ஆப்கன் அணி வங்கதேச அணியை 42.1 ஓவரில் 119 ரன்கள் மட்டும் கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 136 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. வங்கதேச அணியில் 7 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: