புளுதியூர் சந்தையில் 27 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

அரூர்: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன் கிழமையில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில், மாடு 22ஆயிரம் முதல் 43,200 வரையும், ஆடு 2,550 முதல் 7,300 வரை விற்பனையானது. மொத்தம் 27லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: