விழாக்கள் இல்லாததால் தோவாளை சந்தையில் பூக்கள் விலை சரிவு

நாகர்கோவில்: தோவாளை மலர் சந்தையில்  புரட்டாசி மாதம் என்பதால் பூக்கள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.  தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவிற்கும், வெளிநாடுகளுக்கும் தோவாளை மலர் சந்தையிலிருந்து பூக்கள் ஏற்றுமதி ஆகிறது. தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், சுபமூகூர்த்தங்கள் மற்றும் கோயில் விழாக்கள் இல்லை.  இதனால் பூ விலை சரிய ஆரம்பித்துள்ளது.  கடந்த வாரம் வரை கிலோ 500 முதல் 700 வரை விற்ற மல்லிகைப்பூ நேற்று (19ம் தேதி) தோவாளையில் 150 முதல் 300 வரை விற்பனை ஆனது. பிச்சிப்பூ சீசன் என்பதால் 250 முதல் 300 வரை விற்பனை ஆனது. ஆனால் நேற்று 125க்கு விற்பனை ஆனது.

இதுபோல் (அடைப்பில் நேற்று முந்தைய தினம் விலை) முல்லை 100 (250) கனகாம்பரம் 300,  தோவாளை அரளி 20 (70), சேலம் அரளி 50, வாடாமல்லி 25 (30), சம்பங்கி 40 (55), கொழுந்து 60 (100), மரிக்கொழுந்து 100 (80), பாக்கெட் ரோஸ் 10, பட்டன்ரோஸ் 80, தாமரை 2, ஆரஞ்சு கேந்தி, 40(45), மஞ்சள் கேந்தி 30 (35),  கோழி பூ 40 (35), துளசி 20 என விற்பனை ஆனது. இதுபற்றி பூ வியாபாரி சொக்கலிங்கம் கூறுகையில், புரட்டாசி மாதம் விழாக்கள் கிடையாது என்பதால், விலை குறைவது வாடிக்கைதான். இனி வரும் நாட்களில் பூக்கள் விலை இன்னமும் குறையும். ஜப்பசி மாதம் முதல் பூக்கள் விலை உயரும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: