புதன்சந்தையில் ஆடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம்: புரட்டாசி விரத மாதத்தால் மக்களிடையே இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் புதன்சந்தையில் ஆடுகள் விலை சரிந்தது.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்ேபார் ஆடுகள், கிடா, குட்டிகளை விற்பனை செய்ய சந்தைக்கு ஓட்டி வருகின்றனர். இதை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் சந்தைக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.

புரட்டாசி மாதம் பிறந்ததால் மக்களிடையே இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் சந்தையில் ஆடுகள் விலை குறைந்தது. கடந்த வாரம் 5,500க்கு விற்கப்பட்ட இறைச்சி ஆடு, இந்த வாரம் 5,200க்கு விற்பனையானது. மேலும், 3,800க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு 3,500க்கும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குட்டி ஆடு 900க்கும், கிடா குட்டி ஆயிரம் ரூபாய்க்கும் சந்தையில் விற்பனையானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: