50,000 ஏக்கரில் மல்பரி சாகுபடி 53,000 கிராமங்களில்பட்டுக்கூடு உற்பத்தி: அதிகாரிகள் தகவல்

சேலம்: தமிழகத்தில் 50,000 ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்து, பட்டுக்கூடு உற்பத்தி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்பத்தியாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, சேலத்தில் மண்டல பட்டுக்கூடு வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும், பட்டுக்கூடு வளர்க்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி ராஜகுமார் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 32 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், நமக்கு 38 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டு தேவைப்படுகிறது. 6 ஆயிரம் டன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

வெளிநாடுகளில் இறக்குமதி செய்வதை தவிர்க்க, நம்நாட்டில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன்வரவேண்டும். இந்தியாவில் 28 மாநிலங்களில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. 53,000 கிராமத்தில் பட்டுக்கூடு உற்பத்தி நடந்து வருகிறது. 60 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து வருகிறது. தமிழகத்தில் 50,000 ஏக்கரில் மல்பரி சாகுபடியும், பட்டுக்கூடு உற்பத்தியு ம் நடக்கிறது. ஒரு ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்தால் 5 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஒரு பட்டுக்கூடு 250 முதல் 350 வரை விலைக்கு வாங்கப்படுகிறது. 100 முட்டை மூலம் 70 முதல் 80 கிலோ பட்டுக்கூடு உற்பத்தி கிடைக்கிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: