மோட்டார் வாகன ஆய்வாளர் லாக்கரில் 12 கிலோ தங்கம் சிக்கியது

கடலூர்: கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 12 கிலோ தங்கம் சிக்கியது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவர் பாபு.  இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கடலூர் தவ்லத் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது. அதில், அவரது வீட்டிலிருந்து ரூ.35 லட்சம் பணம், 200 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கடலூரில் உள்ள தனியார் வங்கியில் அவரின் லாக்கரில் நேற்று சோதனையிட்டதில், அதில் 8.250 கிலோ தங்கமும், அதுபோல் கடலூர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் சோதனையிட்டதில் 3.750 கிலோ தங்க நகைகளும் சிக்கியது. இன்னும் மீதமுள்ள அவரின் வங்கி லாக்கர்களையும் சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: