இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியாவுக்கு ஒருநாள் பயணமாக வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட அந்த நாட்டுக்கு இந்தியா உதவி வருகிறது. அந்த நாட்டில் மறுகட்டமைப்பை ஏற்படுத்தி சமூக பொருளாதரத்தை மேம்படுத்தும்  வகையில் கடந்த 2002ம் ஆண்டு முதல் அந்த நாட்டுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியா உதவியாக வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நேற்றுகாலை ஒரு நாள் பயணமாக டெல்லி வந்தார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனியை பிரதமர் நரேந்திர மோடி இனிதாக வரவேற்றார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை முன்னிட்டு, இந்த வரவேற்பு நடைபெற்றது’ என கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் கனி இடையே விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மோடியிடம் தமது நாட்டில் நிலவும் அமைதி, நிலைத்தன்மை குறித்து  கனி எடுத்துரைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: