சட்டீஸ்கரில் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியது அடக்குமுறை - ராகுல் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘‘சட்டீஸ்கரில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அரசியல் அடக்குமுறை” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  சட்டீஸ்கரில் அமைச்சர் அமர் அகர்வாலுக்கு எதிராக காங்கிரஸ் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியது. இதில், பிலாஸ்பூரில் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், 7 பேர் காயமடைந்தனர். 52 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தடியடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நரேந்திர மோடி ஆட்சியில் சர்வாதிகாரம் என்பது ஒரு தொழிலாக மாறிவிட்டது. காங்கிரஸ் தொண்டர்களின் அடிப்படை உரிமைகள் மீது ராமன் சிங் அரசு கோழைத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இது அரசியல் அடக்குமுறை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவையும் அவர் இணைத்துள்ளார். இது குறித்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் நீரஜ் சந்திரகர் கூறுகையில், “காங்கிரஸ் தொண்டர்கள் அமைச்சரின் வீட்டிற்குள் குப்பையை கொண்டு வந்து கொட்டினர்.. பெண் காவலர்கள், காவலர்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அவர்களை கைது செய்ய முயன்றபோது போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அதனால்தான், அவர்களை கைது செய்வதற்காக லேசான தடியடி நடத்தப்பட்டது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: