பாகிஸ்தானின் ராணுவ தளபதியை கட்டிப் பிடித்தது ரபேல் ஒப்பந்தம் கிடையாது : சித்து ஆவேசம்

சண்டிகர்: பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப் பிடித்ததை சித்து தவிர்த்திருக்கலாம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்துள்ள சித்து, ‘‘அது வெறும் தழுவுதல் மட்டுமே; ரபேல் ஒப்பந்தம் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கடந்த மாதம் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த விழாவில், பாகிஸ்தான் ராணுவ தளபதியை மரியாதை நிமித்தமாக சித்து கட்டிப்பிடித்தார்.இந்த சம்பவம் இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. பாஜ தலைவர்கள் பலர், அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் முதல்வரும், சித்துவின் இந்த நடவடிக்கையை கண்டித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘சித்துவின் இந்த செயல், ராணுவ வீரர்களிடையே பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தளபதியை கட்டிப்பிடித்ததை சித்து தவிர்த்து இருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்.சண்டிகரில் சித்து நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ராணுவ தளபதியை நான் கட்டிப்பிடித்தது மரியாதை நிமித்தமான ஒன்று. அது ஒன்றும் மிகப்பெரிய சதித்திட்டம் இல்லை. கட்டியணைப்பது என்பது ரபேல் ஒப்பந்தம் இல்லை. சீக்கியர்கள் மீதான துப்பாக்கி குண்டு தாக்குதலும் இல்லை. ஒரு நிமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் பெரிது படுத்துகிறீர்கள். அது என்ன சதிதிட்டமா? இந்தியா-  பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது, வீரர்கள் ஒருவரை ஒருவர் கைகுலுக்கவோ, கட்டித் தழுவவோ மாட்டார்களா? நீங்கள் கைகுலுக்க மாட்டீர்களா? பாகிஸ்தான் பிரதமராக உள்ள சிறந்த மனிதர், வந்தால், விராத் கோலி போன்ற நமது வீரர்கள் கைக்குலுக்க மாட்டார்களா? முதுகை காட்டிவிட்டு போவார்களா?’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: