மோடிக்கு எதிராக துண்டுபிரசுரம் : பாஜகவினர் கொலை மிரட்டல் வக்கீல் நந்தினி போராட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய வக்கீல் நந்தினிக்கு பாஜவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியவரை, தந்தையுடன் போலீசார் கைது செய்தனர்.மதுரையை சேர்ந்தவர் வக்கீல் நந்தினி. இயற்கை வழி மனிதநேய இயக்க ஒருங்கிணைப்பாளர். இவரது தந்தை ஆனந்தன். இயக்க ஆலோசகராக உள்ளார். இவர்கள் இருவரும் ‘குடி வீட்டுக்கு கேடு, மோடி நாட்டுக்கு கேடு’ என்கிற வாசகம் எழுதிய பதாகையுடன் தமிழகம் முழுவதும் டூவீலரில் சென்று, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர்.

இதன்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள பல்கலைக்கழக சாலையில் நேற்று காலை நந்தினியும், அவரது தந்தையும் மாணவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாஜ பிரமுகர்கள், ‘பிரதமருக்கு எதிராக உள்ள பதாகையை அப்புறப்படுத்த வேண்டும்’ என்றனர். இதனால் அவர்களுக்கும், நந்தினிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நந்தினிக்கு ஆதரவாக பொதுமக்கள் திரண்டதால், பாஜ பிரமுகர்கள் அங்கிருந்து நழுவினர்.தொடர்ந்து இருவரும் பிரசுரம் வழங்கியபோது, இரண்டாம் பீட் பகுதியில் பாஜ கட்சியினர் சிலர், பதாகையை கிழித்து எறிந்ததோடு, நந்தினியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாலையில் அமர்ந்து நந்தினி போராட்டத்தில் ஈடுபட்டார்.  அங்கு வந்த காரைக்குடி போலீசார் போராட்டத்தை கைவிடக் கோரினர். ஆனால், போராட்டத்தை தொடர்ந்ததால், நந்தினி, அவரது தந்தை ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: