நிர்மலா தேவி வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு மாற்றம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார்  கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த 1,360 பக்க குற்றப்பத்திரிகை நகர் மூவருக்கும் கடந்த 17ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலாதேவி உட்பட மூவரும் நேற்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி திலகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் நீதிபதி, ‘மூவரும் தனித்தனியாக வக்கீல்கள் வைத்து வாதாட முடியுமா’ என உறுதி செய்து கொண்டார்.  இதனையடுத்து இவ்வழக்கு 209 வது பிரிவின் கீழ், மேல் விசாரணைக்காக, திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் மூவருக்கும் வரும் 24ம் தேதி வரை காவலை நீட்டித்து, அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: