பான் பசிபிக் ஓபன் : கால் இறுதியில் நவோமி ஒசாகா

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தகுதி பெற்றார்.இரண்டாவது சுற்றில் ஸ்லோவகியாவின் டொமினிகா சிபுல்கோவாவுடன் நேற்று மோதிய ஒசாகா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 59 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் செரீனாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.மற்றொரு 2வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா 1-6, 2-6 என்ற நேர் செட்களில் தகுதிநிலை வீராங்கனை அலிசான் ரிஸ்கியிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வியடைந்தார். முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக்.), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: