ஜோகோர் கோப்பை ஹாக்கி : இந்திய ஜூனியர் அணி அறிவிப்பு

புதுடெல்லி: சுல்தான் ஆப் ஜோகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.மலேசியாவில் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 13ம் தேதி இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி: கமல்பீர் சிங், பங்கஜ் குமார் ரஜக் (கோல் கீப்பர்கள்); மன்தீப் மோர் (கேப்டன்), சுமன் பெக், முகமது பராஸ், சோம்ஜீத், பிரின்ஸ், வரிந்தர் சிங் (தற்காப்பு வீரர்கள்), யாஷ்தீப் சிவாச், ஹர்மான்ஜித் சிங், விஷ்ணு காந்த் சிங், கோபி குமார் சோங்கர், விஷால் ஆன்டில், ஹஸ்பிரீத் சிங் (நடுகளம்); ஷிலானந்த் லாக்ரா (துணை கேப்டன்), குர்சகாப்ஜித் சிங், அபிஷேக், பிரப்ஜோத் சிங், ஷிலானந்த் லாக்ரா (முன்களம்); ஜூட் பெலிக்ஸ் (பயிற்சியாளர்).

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: