சில்லி பாயின்ட்...

* யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின்போது முழங்கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆசிய அளவிலான ஏடிபி டூரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

* இந்திய பேட்மின்டன் கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும் பேட்மின்டன் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாநில பேட்மின்டன் சங்கங்களுக்கு ₹1.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மங்கோலியாவில் நடைபெற்ற ஏஎப்சி மகளிர் யு-16 தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா 6 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடம் வகிக்கிறது.

* இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் அக். 10ம் தேதி நடக்கிறது. இங்கிலாந்து: இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், டாம் கரன், லியாம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

* ஐஎஸ்எல் தொடரில் களமிறங்கும் பெங்களூரு எப்சி அணியின் கேப்டனாக சுனில் செட்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: