பிஎஸ்வி-க்கு எதிராக மெஸ்ஸி ஹாட்ரிக்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பார்சிலோனா அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் பிஎஸ்வி எய்ந்தோவன் அணியுடன் மோதியது. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் போட்டு (31வது, 77வது மற்றும் 87வது நிமிடம்) அசத்தினார். இது அவரது 48வது ஹாட்ரிக் ஆகும். டெம்பெலி 74வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: