நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன் : ஷூ காலால் எட்டி உதைத்த போலீஸ் ... உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

சென்னை: சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மயிலாப்பூரில் சீரியல் படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டாதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பின்னர் கடந்த திங்கட்கிழமை கே.கே.நகர் ராஜாமன்னார் சாலை தனியார் பள்ளி முன்பு நடிகை நிலானி வந்துள்ளார். அங்கு தனது காதலியை பார்க்க காந்தி பெட்ரோலுடன் வந்துள்ளார். அப்போது நிலானி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, தீக்குளித்து உயிரிழந்தார்.இதை தொடர்ந்து நடிகை நிலானி தனது காதலன் காந்தி தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என்று கூறி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். காந்தி பல பெண்களை ஏமாற்றியுள்ளார். அவருக்கு ஆண்மை கிடையாது. அவரது வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் பல பெண்களுக்கு காதல் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று நடிகை நிலானி தெரிவித்திருந்தார். இதற்கு உயிரிழந்த காந்தியின் சகோதரர் ரகு கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நிருபர்களிடம் ரகு கூறியதாவது:

என் தம்பி தப்பு செய்தான். என்ன தப்பு என்றால் நடிகை நிலானியை திருமணம் செய்து ெகாள்ள முடிவு செய்தது. அவளுக்காக தனது உயிரை தீயில் கருக்கியது. என் தம்பியுடன் 3 ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்திவிட்டு இன்று அவன் சைக்கோ என்று கூறுகிறார். திருமணமாகாத என் தம்பியை காதல் வலையில் சிக்க வைத்து அவனிடம் இருந்து பணத்தை பறித்தார். நிலானி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் என் தம்பி உழைப்பால் வாங்கி கொடுத்தது. 3 ஆண்டுகளாக நிலானியின் இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தை போல் காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு சென்று அழைத்து வருவார். இப்படி இருந்த என் தம்பி எப்படி இன்று கெட்டவன்? நாங்கள் என் தம்பியிடம் நடிகை எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது விட்டு விடு என்று கூறினோம். ஆனால் அவன் விடாமல் நிலானிதான் என் மனைவி என்று கூறி அவளுடன் வாழ்ந்து வந்தான். 3 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்தி விட்டு அவன் இறந்த பிறகு அவனுக்கு ஆண்மை இல்லை என்று கூறுகிறார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரவழைத்து ஒன்றாக இருந்த போது தெரியவில்லையா? சந்தோசமாக இருந்த போது மட்டும் என் தம்பி ஆண் மகனாக இருந்தானா?

என் தம்பிக்கு பல பெண்களுடன் பழக்கம் உள்ளது என்று நிலானி கூறியுள்ளார். ஆண்மை இல்லாதவன் எப்படி பல பெண்களுடன் பழக முடியும். அதில் இருந்தே நிலானி என் தம்பி மீது பொய் சொல்கிறார் என்று மக்கள் நம்ப வேண்டும். நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு நபரை இழந்து நிற்கிறோம். உலகத்தை விட்டு சென்ற காந்தி பேச மாட்டான் என்ற தைரியத்தில் நிலானி இப்படி அபாண்டமாக பொய் சொல்லி தனது பக்கம் உள்ள தவறை மறைக்க பார்க்கிறார். எங்கள் சொல் பேச்சு கேட்காமல் நிலானி பின்னால் சென்றான்.  இதனால் நாங்கள் நிலானி மீது போலீசில் புகார் அளிக்காமல் இருந்தோம். ஆனால் என் தம்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். என் தம்பி தற்கொலைக்கு என்ன காரணம் என்ற ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை நான் சரியான நேரத்தில் வெளி உலகத்திற்கு வெளியிடுவேன். அதன் பிறகு யார் மீது தவறு என்று பொதுமக்கள் சொல்லட்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 

நிலானி திரையரங்கு உரிமையாளர் ஒருவருடன் ஒன்றாக மது குடித்தது குறித்து கண்டித்ததால் என் தம்பியை விட்டு அவர் பிரிய முடிவு செய்தார். இந்த பிரச்னையால் தான் இன்று என் தம்பி இந்த உலகத்தில் இல்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை நிலானியை சந்திக்க வந்த என் தம்பி மீது மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது விசாரணை என்ற பெயரில் உதவி ஆய்வாளர் ஒருவர் நடிகை நிலானிக்கு ஆதரவாக, காந்தியை ஷூ காலால் எட்டி உதைத்தார். காதலித்ததை தவிர என் தம்பி வேறு எந்த தவறும் ெசய்ய வில்லை.

 இதனால் என் தம்பிக்கு செருப்படி விழுந்தது. இதுபோன்ற செயல்தான் என் தம்பி மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியது. கடைசியாக ஒன்று சொல்கிறோம். நடிகை நிலானி என் தம்பி குறித்த தவறான தகவல்களை இனி கூறி வந்தால்,  நான் சும்மா இருக்க மாட்டேன். அவருக்கு எதிரான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் இரண்டு நாளில் வெளியிடுவேன். எங்கள் குடும்பத்தில் ஒருவரை நாங்கள் இழந்து இருக்கிறோம். அதை விட வலி என் தம்பி மீது நிலானி கூறும் குற்றச்சாட்டுகள்தான். இவ்வாறு உயிரிழந்த காந்தியின் சகோதரர் ரகு தெரிவித்தார்.

நிலானி தோழி, காந்தி பேசிய ஆடியோ வெளியானது

தற்கொலைக்கு முன் துணை இயக்குனர் காந்தியுடன், நடிகை நிலானியின் தோழி பேசிய 20 நிமிட ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் நிலானி தனது ஆண் நண்பர்களுடன் பழகியது, அதற்கான ஆதாரங்கள், ஆண் நண்பருடன் விமானத்தில் சென்றதற்கான போர்டிங் பாஸ் வைத்திருப்பது, உள்ளிட்ட பல தகவல்களை காந்தியிடம் தெரிவித்துள்ளார். ஆதாரங்களையும் காந்தியிடம் வழங்கியுள்ளார். இந்த ஆதாரங்களுக்கு பிறகு தான், காந்திக்கும் நிலானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: