பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு 850 மாணவிகள் மனித சங்கிலி

சென்னை: சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் உபயோகிப்பதினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்திவருகிறது.  நேற்று  சென்னை மாநகராட்சி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்   இணைந்து, வில்லிவாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சுமார் 850 மாணவியர்கள் கலந்து கொண்டு  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  

பின்னர், மாணவிகள் அனைவரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சிட்கோ நகர் 1வது பிரதான சாலை, 4வது பிரதான சாலை மற்றும் சென்னை திருவள்ளுர் நெடுஞ்சாலையில்  மனித சங்கிலியாக நின்று  கொண்டு  பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: