காஸ் நிரப்பும் நிலையம் முற்றுகை: காசிமேட்டில் பரபரப்பு

காசிமேடு: காசிமேட்டில் ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை காசிமேடு, ஜீவரத்தினம் சாலையில் கடந்த 6 மாதங்களாக ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் காஸ் நிரப்பும் நிலையம் திறந்தால், இதை  சுற்றியுள்ள சிசி காலனி, காசிபுரம், ஒய்எம்சிஏ குப்பம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு காஸ் நிரப்பும் நிலையத்தை  திறக்கக்கூடாது என்று ஏற்கனவே இப்பகுதி மக்கள் 2 முறை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், புதிய காஸ் நிரப்பும் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதை அறிந்ததும், ஜீவரத்தினம் சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, அந்த நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து  பாதித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: