சென்னையில் கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடைகளில் வாடகை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடைகளில் வாடகை பாக்கி வைத்துள்ள 3 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தமிழக முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் 38,645 கோயில் உள்ளது. இதில், சென்னையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 22,600 கட்டிடங்கள், 33,665 மனைகளும் உள்ளது. இதில், சென்னை மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளது. இதை வாடகை, குத்தகைக்கு எடுத்தவர்கள் முறையாக கட்டணம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் ேகாயிலுக்கு சொந்தமான நிலங்களில் வாடகை பாக்கியை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என்று அந்தெந்த கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அந்தெந்த கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் மனை, கட்டிடம் மற்றும் நிலங்களை வாடகை மற்றும் குத்தகை எடுத்த 3 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோட்டீஸை தபால் மூலமாகவும், ஒவ்வொரு வீடு, வீடாக சென்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். அந்த நோட்டீசின் பேரில் தற்போது வாடகை தாரர்கள் பாக்கி ெதாகையை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, வாடகை பாக்கி செலுத்தாதவர்களில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: