நன்னடத்தையை மீறி குற்றங்களில் ஈடுபட்டதால் ரவுடி லோகுக்கு 248 நாள் சிறை: துணை கமிஷனர் அரவிந்தன் நடவடிக்கை

சென்னை: சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி லோகு (எ) லோகநாதன் (38). இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு லோகு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,  பாண்டிபஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனிடம் ரவுடி ேலாகு மீது 110 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். அதன்பிறகு ரவுடி லோகு நான் இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன்  என்று தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் முன்னிலையில் கடிதம் எழுதி கொடுத்தார். இதற்கிடையே கடந்த வாரம் தி.நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (எ) சண்முகம் என்பவரிடம் லோகு மது குடிக்க பணம் கேட்டு, அவரது  தலையில் பீர் பாட்டிலால் ஓங்கி அடித்தார்.

Advertising
Advertising

புகாரின்பேரில், ரவுடி லோகு போலீசார் கைது செய்தனர். சட்டப்பிரிவு 110 உடன் 122(1)(b) ன் படி நன்னடத்தை கடித்தை மீறி தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் ரவுடி லோகுவை  248 சிறையில் அடைக்க தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் ரவுடி லோகுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: