அந்தமான் கவர்னர் மாமல்லபுரம் வருகை

சென்னை: சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு அந்தமான் கவர்னராக உள்ள டி.கே. ஜோஷி நேற்று வந்தார். அவரை திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் வரதராஜன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகநாத்சிங்,  மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் தமிழ் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்றனர். இதையடுத்து, அவர் கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை கல்  உள்ளிட்ட பல்லவர் கால குடைவரை சிற்பங்களையும், புராதனச் சின்னங்களையும் சுற்றிப்பார்த்தார். மிகச்சிறப்பான முறையில் இப்புராதனச் சின்னங்கள் பராமரிக்கப்படுவதாக அவர் பாராட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: