×

சென்னை வங்கியில் ‘ஸ்விப்ட்’ முறையில் 34 கோடி சுருட்டல்: புனே வங்கி மோசடியில் சிக்கியவர்கள் திடுக்

சென்னை: வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யாமலேயே, ‘ஸ்விப்ட்’ முறையில் ஒரு வங்கியில் இருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நடைமுறைவழக்கத்தில் உள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு  உத்தரவாத கடிதம் அனுப்பினால்போதுமானது. பணபரிமாற்றம் செய்யப்பட்ட பின்னர், அந்த தொகை சம்பந்தப்பட்டவங்கிகளுக்கு திரும்பி செலுத்தப்படும். இந்த ‘ஸ்விப்ட்’ முறையில் முறைகேடுசெய்து, சிலர் கோடிக்கணக்கில்  பண மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக, சென்னை போலீசில் அவர்கள் கொடுத்த புகாரின்படி, சைபர் பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ‘காஸ்மோஸ்’ கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையில், கடந்த ஆகஸ்ட் 11, 12, 13ம் தேதிகளில் சர்வர் இரண்டு முறை ‘ஹேக்கிங்’  செய்யப்பட்டு ₹94 கோடி ரொக்கம், இந்தியா மற்றும் பிரான்ஸ், ஹாங்காங் போன்ற நாடுகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, புனே துணை கமிஷனர் (சைபர் செல்) ஜோதி ப்ரியா சிங் கூறியதாவது: காஸ்மோஸ் வங்கி கணக்கில் மோசடி செய்த குற்றவாளிகளின் புகைப்படம்,  சிசிடிவி காட்சிகளின் தொகுப்பு ஆகியன சென்னை போலீசுக்கு அனுப்பப்பட்டது. அவர்களில், தற்போது கைது செய்யப்பட்ட பாஹிம் கான், ஷேயிக் முகம்மது, அந்தோணி, நரேஷ் ஆகிய 4 பேரும் சென்னை உள்ளிட்ட தென்மாநில  நகரங்களில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், சென்னை தனியார் வங்கி உள்ளிட்ட வங்கிகளில், இந்த கும்பல் ₹34 கோடி அளவிற்கு மோசடி, கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 'Swift', Chennai 34 crore r,Pune bank, fraudsters
× RELATED அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்...