கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கூட்டுறவு வங்கி பணியாளர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் நடத்தும் போராட்டம் அவர்களுக்கான கோரிக்கைகள் சம்பந்தப்பட்டதில்லை. மாறாக கூட்டுறவு வங்கிகளின் எதிர்கால நலன் சார்ந்தது என்பதை அரசு உணர வேண்டும். பயிர் கடன் பெறும் விவசாயிகள் கடன் தொகையில் 30 விழுக்காட்டுக்கு உரம் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும்; சிறு வணிக கடன் தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் கடன் மறுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 பயிர்க்கடனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை உழவர்களுக்கு வழங்காமல் வங்கிகளிலேயே வைத்துக் கொண்டிருப்பது என்ன வகையான கொள்கை?. இவை ஒருபுறமிருக்க திங்கட்கிழமை முதல் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் உழவர்கள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: